தர்மச் சக்கர ஆடை விவகாரம்: மஸாஹிமாவுக்கு பிணை கிடைத்தது

🕔 June 3, 2019

– அஹமட் –

ர்மச் சக்கரம் பதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஆடையை அணிந்தார் எனும் குற்றச்சாட்டில் கைதாகி விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த கொலங்கொட பகுதியைச் சேர்ந்த மஸாஹிமா எனும் பெண், இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

மஹியங்கணை நீதவான் ஏ.ஏ.பி. லக்ஷ்மன் முன்னையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

மே மாதம் 17ஆம் திகதி ஹசலக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மஸாஹிமா, 18ஆம் திகதி தொடக்கம் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மஸாஹிமாவுக்காக, சமூக நலன் கருதி சட்டத்தரணி சறூக் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், வழக்காடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்