என்னிடமிருந்து உதவிகளைப் பெற்ற அரசியல்வாதிகள், எனக்கு உதவவில்லை: மாகந்துர மதுஷ்

🕔 May 19, 2019

ராளமான அரசியல்வாதிகளுக்கு தான் உதவி செய்துள்ளதாகவும், ஆனால், அவர்கள் எவரும் தனக்கு உதவவில்லை என்றும், பாதாள உலகத் தலைவர் மாகந்துர மதுஷ் தெரிவித்துள்ளார்.

துபாயில் கைது செய்து நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வரும் மதுஷ், இவ்வாறு கூறியுள்ளார்.

சில அரசியல்வாதிகள் தன்னிடமிருந்து பண உதவி பெற்றதாகவும், சிலர் தேர்தல்களின் போது உதவிகளைப் பெற்றுக் கொண்டதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் தொடர்பில் ஏராளமான தகவல்களை மதுஷ் வெளியிட்டுள்ளதாகவும், இன்னும் தகவல்களை அவர் வெளியிடுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளதாக, சிங்கள ஊகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தென் மாகாணத்தின் பலம் வாய்ந்த அரசியல்வாதிகள் சிலர் மதுஷுடன் நெருக்கமான உறவுகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வேறு சில அரசியல்வாதிகள் துபாய் சென்று மதுஷை சந்தித்து, அவரிடமிருந்து பல்வேறு விதமான உதவிகளைப் பெற்றிருந்தாகவும் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்