மினுவாங்கொடயில் முஸ்லிம் ஒருவரின் கடைக்கு தீ வைப்பு

🕔 May 16, 2019

மினுவாங்கொடயிலுள்ள முஸ்லிம் ஒருவரின் கடையொன்றுக்கு இன்று வியாழக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகலளவில் குறித்த கடைக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் ஊடகவியலாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு உறுதிப்படுத்தினார்.

மினுவாங்கொடயில் விமான நிலைய வீதியில்
நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளான பவ்ஸ் ஹோட்டலில் இருந்து சுமார் 100 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கடையொன்றுக்கே தீ வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடை எரிந்து சேதமடைந்துள்ளதாகவும், தற்போது அங்கு பொலிஸ் மற்றும் ராணுவத்தினர் பிரசன்னமாகி உள்ளனர் எனவும் குறித்த ஊடகவியலாளர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்