தற்கொலைதாரியின் தொழிற்சாலை ஊழியர்களிடம், வாக்குமூலம் பெற உத்தரவு

🕔 May 13, 2019

சினமன் கிரேன்ட் ஹோட்டலில் தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட மொஹமட் இப்ராஹிம் இன்ஸாப் அஹமட் என்பவருக்குச் சொந்தமான, வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையில் வைத்து கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்ய நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான் பியந்த லியனகே இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருப்பையா ராஜேந்திரன் அப்துல் என்ற சந்தேகநபரிடம் நாளை மற்றும் நாளை மறுதினம் வாக்குமூலம் பதிவு செய்வதற்கும் பொலிஸாருக்கு அனுமதி வழங்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்றில் பயங்கரவாத விசாரணைப்பிரிவு முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக, கொழும்பு மேலதிக நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்