முன்னாள் அமைச்சர் அப்துல் காதர் காலமானார்

🕔 October 3, 2015

Abdul Cader - 01முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.எம். அப்துல் காதர் தனது 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை, கண்டி தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார்.

இன்று பிற்பகல் ஏற்பட்ட தீடீர் சுகயீனம் காரணமாக, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

1936 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பிறந்த அவர், கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.

ஐ.தே.கட்சியினூடாக மிக நீண்டகாலம் நாடாளுமன்றப் பதவியினை வகித்து வந்த இவர், மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்