சட்ட விரோத வர்த்தகத்தில் ஈடுபட்ட பாகிஸ்தான் பிரஜைகள் கைது
சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டுவந்த பாகிஸ்தான் பிரஜைகள் மூவரை நேற்று திங்கட்கிழமை நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கொழும்பு 12 இல் உள்ள வீடொன்றை சுற்றிவளைத்த போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
தகவல் ஒன்றின் அடிப்படையில், குறித்த வீட்டை முற்றுகையிட்ட அதிகாரிகள், முறை கேடான வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 7500 வெள்ளை நீல சவர்க்காரக் கட்டிகளையும், 250 பார்சோப் கட்டிகளையும், 15 லீட்டர் கொள்ளளவான 3500 போத்தல்களில் அடைக்கப்பட்ட உடலுக்கு பூசுவதற்கான வாசனைத் திரவங்களையும் (Body lotion), நகத்துக்கு பூசுவதற்கான 3000 கியூடெக்ஸ் போத்தல்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இந்தப்பொருட்களில் அவை தொடர்பான எந்த விபரங்களோ, உற்பத்தி திகதி, கலாவதியாகும் திகதிகள் பற்றியோ எதுவுமே குறிப்பிடப்படவில்லையெனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள், எதிர்வரும் 04ம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில்ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்தப் பொருட்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட இருந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.