கரு ஜயசூரிய போன்றதொரு தலைவரே, நாட்டுக்கு தேவையாக உள்ளார்: அமைச்சர் சம்பிக்க தெரிவிப்பு

🕔 March 28, 2019

நாட்டுக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய போன்றதொரு தலைவர்தான் தேவையாக உள்ளார் என்று, அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

குடும்ப ஆட்சிக்கு நாடு திரும்ப முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பேசும் போதே, அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக 2015ஆம் ஆண்டு நாங்கள் குறிப்பிடத்தக்க சில அடிகளை எடுத்து வைத்தோம். மீண்டும் அதற்குள் திரும்ப முடியாது.

நாடு பற்றிய நல்லபிப்பிராயத்தை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உருவாக்கக் கூடிய, ஒருவர்தான் இந்த நாட்டுக்கு இப்போது தேவையாக உள்ளார்.

இவ்வாறு கூறும் போது சபா நாயகர் கரு ஜய சூரியவை மறந்து விட முடியாது. அவர் இந்த இந்த விடயங்களில் விரிவான சாதனைகளை செய்திருக்கிறார்” என்றார்.

Comments