இலங்கை வரலாற்றில் அதிகளவு ஹெரோயின் சிக்கியது: நேரில் சென்று பார்வையிட்டார் ஜனாதிபதி

🕔 February 24, 2019

லங்கை வரலாற்றில் ஒரே தடவையில் அதிகளவு ஹெரோயின் போதைப் பொருள் நேற்று சனிக்கிழமை இரவு கைப்பற்றப்பட்டது.

இரு வேன்களில் இருந்து 294 கிலோ 490 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டி வர்த்தக கட்டட தொகுதி வாகனத் தரிப்பிடத்தில் கைப்பற்றப்பட்ட இந்த ஹேரோயினின் பெறுமதி 300 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்படி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது பாணந்துறை – கெசெல்வத்த பகுதியை சேர்ந்த இருவர் கைதாகியிருந்ததோடு, வாகனங்களும் கைப்பற்றப்பட்டன.

இதனையடுத்து, இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படையினரையும், பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரையும் தனது ‘ட்விட்டர்’ பக்கத்தில் ஜனாதிபதி மைத்திரி பாராட்டியுள்ளார்.

இந்த நிலையில் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள்களை ஜனாதிபதி நேரடியாகக் சென்று பார்வையிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

விசேட அதிரடிப் படையின் கட்டளைத் தளபதி எம்.ஆர். லத்தீபும் இதன் போது பிரசன்னமாகியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்