திருமண பந்தத்தில் இணைந்தார் ரோஹித

🕔 January 24, 2019

ஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷவின் திருமணம் இன்று வியாழக்கிழமை தங்காலை வீரகெட்டியவில் நடைபெற்றது.

தனது காதலி டட்யானாவை அவர் இன்று கரம்பிடித்தார்.

இந்த திருமண நிகழ்வு பெரிய ஆடம்பரமின்றி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று ஆண் பிள்ளைகளில், ரோஹித கடைசி மகனாவார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிங்கபூர் சென்றுள்ளமையினால், நேற்றைய தினம் அவர் மணமக்களைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்திருந்தார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சிப் பிரமுகர்களும் இந்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்