நாடாளுமன்ற கலைப்பு வழக்கு; தீர்ப்பை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரவுள்ளார்
நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தமைக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பினை தாமதியாமல் வழங்குமாறு, பிரதம நீதியரசரிடம் ஜனாதிபதி கோரிக்கை விடுக்கவுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சட்டமா அதிபர் ஊடக இந்தக் கோரிக்கை விடுக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாளை செவ்வாய்கிழமை, இந்தக் கோரிக்கையையை ஜனாதிபதி விடுக்கவுள்ளார் எனவும், விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக கடந்த நொவம்பர் மாதம் 09 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினூடாக, ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
இந்த அறிவித்தலுக்கு எதிராக நொவம்பர் 12ஆம் திகதி பல கட்சிகளும், அமைப்புக்களும் வழக்குத் தாக்கல் செய்திருந்தன.