இடைக்காலத் தடைக்கு எதிராக, மேன்முறையீடு செய்வோம்: நாமல் தெரிவிப்பு
பிரதமர் பதவி வகிப்பதற்கு மஹிந்த ராஜபக்ஷ விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடைக்கு எதிராக, தாங்கள் மேன்முறையீடு செய்யப் போவதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவரின் ட்விட்டர் பக்கத்திலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
மேன்முறையீடு செய்வது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரமுகர்களும் சட்ட ஆலோசனைகளைப் பெற்று வருவதாகவும் நாமல் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, பொதுத் தேர்தல் ஒன்றுக்கான தமது அழைப்பு தொடரும் எனவும் தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்திருக்கின்றார்.
தொடர்பான செய்தி: பிரமர் பதவியை வகிக்க மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடைக்காலத் தடை