ரணிலுக்கு ஆதரவளிப்பதில், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் குழப்பம்

🕔 November 18, 2018

க்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நாடாளுமன்றில் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு ஆதரவாக, சத்தியக்கடதாசி வழங்கும் விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஒருமித்த கருத்து ஏற்படவில்லையென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

“தமிழரசுக் கட்சி, ரணிலை ஆதரிக்க துணை போனால், அது வரலாற்றுத் தவறாகி விடும்” என்ற கடும் நிலைப்பாட்டில், தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பிருமான மாவை சேனாதிராசா இருப்பதாகவும், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களும் இதே நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளதாகவும்,  மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மட்டுமே, இதுவரை ரணிலுக்கு ஆதரவான சத்தியக்கடதாசியில் கையொப்பமிட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

இவர்களில் எஸ். வியாழேந்திரன் – புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆரவளிக்கும் வகையில் அணி தாவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(தகவல் மூலம்: –  ஆர். சிவராஜா – சிரேஷ்ட ஊடகவியலாளர்) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்