தாமரை மொட்டில் இணைந்தார் மஹிந்த ராஜபக்ஷ: தலைமைப் பொறுப்பையும் விரைவில் ஏற்பார்

🕔 November 11, 2018

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, தாமரை மொட்டினை சின்னமாகக் கொண்ட, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவத்தை இன்று ஞாயிற்றுக்கிழமை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், அந்தக் கட்சியின் தலைமைப் பதவியையும், அவர் விரைவில் ஏற்பார் என எதிர்பாரக்கப்படுகிறது.

தற்போது பொதுஜன பெரமுனவின் தலைவராக, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பதவி வகிக்கின்றார்.

எவ்வாறாயினும், பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கூட்டிணைந்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இருந்தபோதும், சுதந்திரக் கட்சி தனியாகப் போட்டியிட வேண்டும் என்று, அந்தக் கட்சிக்குள் ஒரு தரப்பினர் விரும்புகின்றனர்.

இதேவேளை, சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் சிலர், அந்தக் கட்சியை விட்டும் பிரிந்து செல்லவுள்ளதாக செய்திகள் வெளியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்