நாடாளுமன்றத்தை கூட்ட, ஜனாதிபதி தீர்மானம்: பிரதமர் மஹிந்த தெரிவிப்பு

🕔 November 1, 2018

நாடாளுமன்றத்தை எதிர்வரும் 05ஆம் திகதி கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடன், இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற சந்திப்பொன்றின்போதே, இவ்விடயத்தை அவர் கூறினார்.

புதிய  பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றமையை அடுத்து, நாடாளுமன்றத்தை நொவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை ஒத்தி வைப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். அதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 27ஆம் திகதி வெளியிடப்பட்டது.

ஆனாலும், நாடாளுமன்றத்தை தற்போதைய அரசியல் சூழ்நிலையில் இவ்வாறு ஒத்தி வைத்தமை குறித்து அரசியல் கட்சிகளும், ஏனைய பல தரப்புக்களும் கண்டனம் வெளியிட்டிருந்தன.

அதேவேளை நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு சர்வதேச நாடுகளும் கோரிக்கை விடுத்திருந்தன.

நேற்றைய தினம் ஜனாதிபதியைச் சந்தித்த சபாநாயகர் கருஜயசூரியவும், நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறு வேண்டியிருந்தார்.

இவ்வாறன சூழ்நிலையிலேயே, 05ஆம் திகதி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக, பிரதமர் மஹிந்த அறிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்