முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்; 26 நாட்களுக்குப் பிறகு வெளியில்

🕔 May 28, 2015

Johnston fernando - 01முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் – இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

லங்கா சதோச நிறுவனத்தில் 52 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இம்மாதம் 02 ஆம் திகதி – நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட ஜோன்ஸ்டன் பெணான்டோ, இன்றுவரை விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில்,  ஜோன்ஸ்டன் பெணான்டோவை பிணையில் விடுவிக்குமாறு கோரி சமர்ப்பிக்கப்பட்ட மனு,  இன்றைய தினம் குருநாகல் மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

ஜோன்ஸ்டன் பெர்ணாவை பிணைவில் விடுவிக்குமாறு சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில், சட்டமா அதிபர் சார்பாக எதிர்ப்புத் தெரிவிக்கப்படாததால், அவரை பிணையில் செல்வதற்கு நீதிமன்றம் அனுமதித்தது.

25ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், 25 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீர பிணைகளிலும் – ஜோன்ஸ்டன் பெணான்டோவை, குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி சுனந்த குமார ரத்னாயக்க விடுவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்