சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீனின் ‘சாட்சியங்கள்’ நூல், காத்தான்குடியில் இன்று வெளியீடு

🕔 October 12, 2018

– அஹமட் –

சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எஸ்.எம். நூர்தீன் எழுதிய ‘சாட்சியங்கள்’ எனும் நூல் வெளியீட்டு விழா, இன்று வெள்ளிக்கிழமை பிற்பகள் 3.30 மணிக்கு காத்தான்குடி ‘பீச்வே’ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.

காத்தான்குடி மீடியா போரம் ஏற்பாடு செய்துள்ள இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கு, அந்த அமைப்பின் தலைவர் மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா தலைமை தாங்கவுள்ளார்.

இவ்விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஆகியவற்றின் தலைவர் என்.எம். அமீன் பிரதம விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் நூர்தீன் தேசிய பத்திரிகைகளில் எழுதிய ஆக்கங்களில், தெரிவு செய்யப்பட்டவற்றினை தொகுத்து, ‘சாட்சியங்கள்’ எனும் நூல், வெளியிடப்படுகிறது.

‘சாட்சியங்கள்’ நூலின் விமர்சன உரையை ‘வசந்தம்’ தொலைக்காட்சி செய்திப்பிரிவு முகாமையாளர் எம்.எஸ். முகம்மட் இர்பான் நிகழ்த்தவுள்ளார். அதேவேளை, வெளியீட்டுரையை ‘விடிவெள்ளி’ பத்திரிகையின் ஆசிரியர் எம்.பி.எம்.பைறூஸ் வழங்கவுள்ளார்.

இந்த விழாவில், ஊடக நிறுவனங்களின் பிரதம ஆசிரியர்கள், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் எனப் பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்