சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவிகளிலிருந்து 05 முக்கியஸ்தர்கள் நீக்கம்

🕔 September 21, 2018

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து 05 பேரை, அந்தக் கட்சி நீக்கியுள்ளது.

அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரில் இவர்கள்உள்ளடங்குகின்றனர்.

முன்னாள் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, ஜோன் செனவிரட்ன, லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன மற்றும் சந்திம வீரகொடி ஆகியோர் அமைப்பாளர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று வியாழக்கிழமை கூடியபோது இந்தத் தீர்மானம் எட்டப்பட்டது.

மாவட்டத்தில் கட்சியை அடிமட்டத்தில் வளர்த்தெடுப்பதற்கு இவர்கள் தவறியமையினாலேயே, அவர்களின் அமைப்பாளர் பதவிகள் பறிக்கப்பட்டன என்று தெரியவருகிறது.

அரசாங்கத்திலிருந்து விலகிய சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுனவுடன் நெருங்கிச் செயற்படுகின்றதாகக் கூறப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Comments