தனது வெற்றிக்குப் பங்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு, அமைச்சர் ஹக்கீம் ஹேவாஹெட்ட விஜயம்

🕔 September 9, 2015

Hakeem - Galaha - 02
– ஜம்சாத் இக்பால் –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், தமது தேர்தல் வெற்றிக்குப் பங்களிப்புச் செய்த வாக்காளர்களுக்கும், பொது மக்களுக்கும் நன்றி செலுத்தும் பொருட்டு, அண்மையில் ஹேவாஹெட்டத் தொகுதியிலுள்ள கலஹா, தெல்தோட்டை மற்றும் உடுதெனிய (மாரஸ்ஸன) பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.

முதலில் கலஹாவுக்கு சென்ற அமைச்சர் ஹக்கீம், அங்குள்ள தெல்தோட்டை, கபடாகம, ரல்லிமங்கொட, கோணாங்கொட, பத்தாம்பள்ளி, முஸ்லிம் கொலணி, முப்பதுவீடு, மெதகெக்கில, பீலிக்கரை, வனஹப்புவ, வெட்டகேபொத்த, பல்லேகம மற்றும் உடுதெனிய ஆகிய கிராமங்களுக்கும் வருகை தந்தார். இதன்போது, அவருக்கு அங்குள்ள பொதுமக்களா் வரவேற்பளிக்கப்பட்டது.

இதன்போது, பிரதேச மக்களின் முக்கிய தேவைகளான சுத்தமான குடிநீர் வசதி, பாதைகள் சீரமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு போன்றவற்றை நிறைவேற்றித்தருவதற்கு உறுதிபூண்டுள்ளதாக, தம்மை வரவேற்று உபசரித்த ஆதரவாளர்களிடம் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்த விஜயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.எச்.எம்.எசல்மான், டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸ், அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம். நயீமுல்லாஹ், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஹேவாஹேட்ட தொகுதி அமைப்பாளர் மௌலவி எச்.எம். இல்யாஸ் ஆகியோரும், கட்சி முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.Hakeem - Galaha - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்