சிறைச்சாலை வைத்தியசாலைக்கு, ஞானசார தேரர் மாற்றம்
சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொள்வதற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர், இன்று வியாக்கிழமை, சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஞானசார தேரருக்கு சத்திர சிகிச்சை நிறைவுபெற்றுள்ள நிலையிலேயே, சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் தெரிவிக்கின்றன.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 19 வருடகால கடூழிய சிறைத் தண்டனையை 06 வருடங்களில் அனுபவிக்க வேண்டுமென, ஞானசார தேரருக்கு நீதின்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையிலேயே, சத்திர சிகிச்சைக்காக தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.