பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் கிடையாது: பைசர் முஸ்தபா

🕔 August 28, 2018

றைபடிந்த விருப்பு வாக்கு தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு கிடையாது என, மாகாண உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த விருப்பு தேர்தல் முறைமை நாட்டுக்குப் பொருத்தமற்றது. தத்தமது கிராமத்துக்கும் தொகுதிக்கும் பொறுப்புக் கூறக்கூடிய பிரதிநிதி ஒருவரைத் தெரிவு செய்யும் முறையொன்று அத்தியாவசியம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

“மாகாணசபை எல்லை நிர்ணயக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகலரும் என்னைப் பதவி விலகுமாறு நிர்ப்பந்திக்கின்றனர். ஆனால், சட்ட திட்டங்களின் அடிப்படையிலேயே நான் செயற்பட்டேன்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments