புதிய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதையே சு.கட்சி விரும்புகிறது: துமிந்த திஸாநாயக்க

🕔 August 27, 2018

புதிய முறைமையின் கீழ் – மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதையே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விரும்புகிறது என்று, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆராய்ச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார்.

இதேவேளை, மாகாண சபைத் தேர்தலை – இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் பழைய முறையிலேயே நடத்த வேண்டும் என்று, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கூறியுள்ளார்.

Comments