ஞானசார தேரருக்கு ஒரு மணி நேரம் சத்திர சிகிச்சை: சாதாரண நிலையில் உள்ளதாக தகவல்

🕔 August 20, 2018

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று திங்கட்கிழமை சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தை அவமதிப்புச் செய்தமைக்காக 06 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேரரின் சிறுநீரகத்தில் உருவான கல்லொன்றை அகற்றுவதற்காக இன்றைய தினம் ஒரு மணிநேர சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது அவர் சாதாரணமான நிலையில் சிகிச்சைகளை பெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Comments