ஐக்கிய தேசியக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானித்து விட்டது
ஐக்கியதேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ஒன்றிணை எதிரணியிடம் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் என எவரும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.
“ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள பிரசன்ன ரணதுங்க குழுவினர் பசில்ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஆனால் விமல்வீரவன்ச, உதயகம்மன்பில போன்றவர்கள் கோட்டாபய ராஜபக்ஷவை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்கவேண்டும் என, தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் வேண்டுகோள் விடுத்துவருகின்றனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.
“எனினும் ஐக்கியதேசிய கட்சி தனது வேட்பாளர் யார் என்பதை ஏற்கனவே தீர்மானித்துவிட்டது. தேர்தல் நெருங்கும் வேளை அதனை அறிவிப்போம்” என கவிந்த ஜெயவர்த்தன தெரிவித்துள்ளார்.