உள்ளுராட்சி சபைத் தேர்தலை இலக்கு வைத்து, மஹிந்த தலைமையில் புதிய கூட்டணி

🕔 August 28, 2015

Mahinda - 055ஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டணியொன்று, எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் – தனித்துக் களமிறங்கவுள்ளதாக தெரியவருகிறது.

ஐ.ம.சு.முன்னணி கலைக்கப்படவுள்ளதால், சுதந்திரக் கட்சியுடன்  கூட்டு வைத்திருந்த ஏனைய கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய கூட்டணியொன்றினை அமைக்கவுள்ளதாகவும், அந்தக் கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதியும், ரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமை வகிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மஹிந்த தலைமையிலான மேற்படி கூட்டணியை அமைப்பதில், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச –  முக்கிய பங்காற்றி வருவதாக அறியமுடிகிறது.

335 உள்ளூராட்சி சபைகளுக்கு எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இவற்றில் 301 சபைகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்டுப்பாட்டில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்