ஐ.தே.க. செயலாளர் பதவிக்கு அகிலவிராஜின் பெயர்; அலரிமாளிகையில் பரிந்துரைப்பு

🕔 April 19, 2018

க்கிய தேசிய கட்சியின் செயலாளர் பதவிக்கு, அமைச்சர் அகிலவிராஜ் காரிசவசம் பொருத்தமானவர் என ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

அலறி மாளிகையில் இன்று வியாழக்கிழமை தமிழ் – சிங்கள புத்தாண்டு வைபவ நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது, ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் சிலர், கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக கடமையாற்றும் அமைச்சர் அகில விராஜ் காரியவசம், பொதுச் செயலாளர் பதவிக்கு தகுதியானவர் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஐக்கிய தேசியக் கட்சியில் நிலவும் முக்கிய பதவிகளுக்கு ஒரு சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் புதிய நிர்வாகக் குழுவை எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு முன்னர் கட்டாயம் நியமிக்க வேண்டுமென கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளது.

கட்சியின் அரசியல் குழு – அலறி மாளிகையில் இன்று கூடியபோது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

எவ்வாறாயினும், இன்று கூடிய அரசியல் குழுவில், கட்சியின் முக்கிய பதவிகளுக்கான பெயர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்