சன நெரிசலுக்குள் வேன் புகுந்ததால் பலர் மரணம்; சாரதி தற்கொலை: ஜேர்மனில் துயரம்

🕔 April 7, 2018

ஜேர்மன் – முன்ஸ்டர் நகரில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் ஒன்று புகுந்து மோதியதில் ஆகக்குறைந்தது 04 பேர் பலியாகியுள்ளனர் என்றும், 30 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தை அடுத்து, வாகனத்தை செலுத்திய சாரதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், இது ஒரு பயங்காரவாதத் தாக்குதலாக இருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜேர்மன் – பேர்லின் நகரில் ட்ரக் வண்டியொன்று நடத்திய தாக்குலில் 12 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துடன், இன்றைய சம்பவம் ஒப்பிடப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் மேற்குபகுதியில் இருக்கும் நகரம் முன்ஸ்டர். இந்த நகரில் இன்று காலை வழக்கம் போல் மக்கள் நெரிசலாக இருந்த போது, வீதியில் வேகமாக வந்த குறித்த வேன், திடீரெதன மக்கள் கூட்டத்துக்குள் புகுந்து நிறுத்தாமல் சென்றுள்ளது.

இதனையடுத்தே, இந்த அனர்த்தம் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்