பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பேன்: அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

🕔 April 4, 2018

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் நடைபெற்று வரும் விவாதத்தில் ஒவ்வொரு அரசியல் கட்சியும், நபர்களும் தமதுநிலைப்பாடு தொடர்பில் அறிவித்து வரும் தருணத்தில், அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க – பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதெனத் தெரிவித்துள்ளார்.

அவர் மட்டுமன்றி தனது தரப்பினரும் ஆதரவாகவே வாக்களிப்பர் எனவும் அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் சபைக்கு வெளியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் – பிரேரணைக்கு ஆதரவாகவே வாக்களிப்பர் என, ராஜாங்க அமைச்சர்கள் டிலான் மற்றும் யாப்பா ஆகியோர் ஏற்கனவே அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்