நம்பிக்கையில்லா பிரேரணை: பிரதமரை மக்கள் காங்கிரஸ் ஆதரிக்கும்

🕔 April 4, 2018

பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்தவர்களின் நோக்கத்தை தோற்கடிக்க பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உயர்பீடம் முடிவு செய்துள்ளது.

நேற்று செவ்வாய்கிழமை இரவு கொழும்பில் கூடிய கட்சியின் உயர்பீடம் சுமார் நான்கு மணி நேரம், இந்த விவகாரம் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டது.

பிரேரணையைக் கொண்டு வந்துள்ளவர்களின் நோக்கம் நல்லாட்சிக்கு சதி செய்து அதனை கவிழ்ப்பதாகும் என தமது கட்சி உணர்ந்ததாலேயே, இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக நேற்று மாலை பிரதமருடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி நீண்ட நேர பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட்டது. இதன் போது முஸ்லிம்களின் பாதுகாப்பு, அம்பாறை, திகன கலவரங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழுமையான நஷ்ட ஈடு வழங்குவதற்கான உத்தரவாதம் வழங்கப்பட்டது.

இதன் பின்னரே அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அரசியல் உயர் பீடம் கூடி மேற்படி இறுதி முடிவை மேற்கொண்டது.

(அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்