முஸ்லிம் ஒருவரின் வர்த்தக நிலையம் திஹாரியில் தீக்கிரை

🕔 April 1, 2018

திஹாரியில் முஸ்லிம் ஒருவருக்குச் சொந்தமான வர்த்தக நிலையமொன்று, இன்று ஞாயிற்றுக்கிழமை தீக்கிரையாகியுள்ளது.

கொழும்பு – கண்டி வீதியிலுள்ள நிப்பொன் செரமிக் எனும் வர்த்தக நிலையமொன்றே, இன்று அதிகாலை 1.00 மணியளவில் தீப்பற்றியுள்ளது.

எவ்வாறாயினும் தீப்பற்றிமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

இருந்தபோதும் இதுவொரு நாசகார வேலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் நடைபெற்ற இடத்தில் லைட்டர் ஒன்றும் கையடக்கத் தொலைபேசியொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்