மு.கா.வின் தேசியப்பட்டியல் நியமனம் உரிய நபர்களுக்கு விரைவில் வழங்கப்படும், தற்போது வழங்கப்பட்டுள்ளமை தற்காலிகமானது; கட்சி வட்டாரம் தெரிவிப்பு

🕔 August 21, 2015

SLMC - 01. தே.கட்சி ஊடாக முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு தேசியப்பட்டியல் ஆசனங்களையும் – மிக விரைவில், உரிய பிரதேசங்களுக்கு பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக கட்சியின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மு.காங்கிரசின் உயர்பீடத்தினைக் கூட்டி, அதன் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொண்டு, கட்சிக்கான தேசியப்பட்டியல் நியமனம் – உரிய பிரதேசங்களுக்கு வழங்கப்படும் என, கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், வர்த்தமானியில் பிரசுரிக்கும் பொருட்டு,  தேசியப்பட்டியல் ஆசனங்களுக்கான நபர்களின் பெயர்கள் உடனடியாக வேண்டப்பட்டமை காரணமாக, கட்சிக்கும் தலைமைத்துவத்துக்கும் நம்பிக்கையான இருவரின் பெயர்கள், முஸ்லிம் காங்கிரசின் தேசியப்பட்டியல் ஆசனத்துக்கு தற்காலிகமாக பரிந்துரைக்கப் பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களிலும், கட்சியின் தேசியப்பட்டியலுக்கு இவ்வாறு நம்பிக்கையானவர்களின் பெயர்கள் தற்காலிகமாக இடப்பட்டமை நினைவு கொள்ளத்தக்கது. ஆயினும், தற்காலிகமாக பெயரிடப்பட்ட நபர்கள், தேசியப்பட்டியல் உறுப்புரிமையினை, தலைமையின் உத்தரவுக்கிணங்க ராஜிநாமா செய்து கொடுத்தவுடன், அந்த வெற்றிடத்துக்கு, கட்சியால் தீர்மானிக்கப்படும் நபர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கட்சியின் மேற்படி முக்கியஸ்தர் கூறினார்.

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்த தேசியப்பட்டியல் ஆசனம் தொடர்பில், கட்சிக்கெதிராக பல்வேறு வதந்திகளை சிலர் பரப்பி வருவதாகவும், அது குறித்து, கட்சி ஆதரவாளர்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என்றும் கட்சித் தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்