அர்ஜுன் அலோசியல், கசுன் ஆகியோருக்கு விளக்க மறியல் நீடிப்பு

🕔 February 5, 2018

பெர்பெசுவல்ஸ் நிறுவன தலைவர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்கிழமை உத்தரவிட்டது.

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் சந்தேச நபர்களாக நீதிமன்றத்தினால் பெயரிடப்பட்டுள்ள மேற்படி இருவரையும், நேற்று குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, அவர்கள் இருவரையும் இன்றை தினம் வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்றைய தினம் மேற்படி இருவரும் கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது, எதிர்வரும் 16ஆம் திகதி வரை, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது

தொடர்பான செய்தி: பிணை முறி மோசடி சந்தேக நபர்களான அர்ஜுன் அலோசியஸ், கசுன் ஆகியோர் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்