மஹிந்தவின் குடியுரிமையைப் பறிக்க, அனுமதிக்க மாட்டோம்: ராஜாங்க அமைச்சர் டிலான்

🕔 February 1, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை பறிப்பதற்கு  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இடமளிக்காது என்று, ராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

மஹிந்த ராஜபக்ஷவினுடையதோ, அல்லது வேறு எந்த அரசியல்வாதியினதோ குடியுரிமையைப் பறிப்பதற்கு சுதந்திரக் கட்சி அனுமதிக்காது.

பிரஜாவுரிமையைப் பறிப்பது ஜே.ஆர்.ஜெயவர்தனவின் கொள்கையேயன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் கொள்கையல்ல” என்றார்.

Comments