விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு, சடுதியாகக் குறைப்பு

🕔 January 16, 2018

முன்னாள் நீதியமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஏழு பேராக இருந்த அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை 02ஆக குறைக்கப்பட்டுள்ளது.

விஜேதாஸ ராஜபக்ஷவிடமிருந்து நீதியமைச்சு பறிக்கப்பட்டபோது, அவரின் பாதுகாப்பு கடமைக்காக பொலில் பரிசோதகர் ஒருவர், உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் மற்றும் 04 பொலிஸ் உத்தியோத்தர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று திங்கட்கிழமை தொடக்கம், விஜேதாஸ ராஜபக்ஷவின் பாதுகாப்புக்காக 02 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்