வேட்பாளரின் வீட்டிலிருந்து, 625 குர்ஆன் பிரதிகள் மீட்பு

🕔 December 31, 2017

தேர்தல் கால அன்பளிப்பாக விநியோகிக்கப்படவிருந்த 625 குர்ஆன் பிரதிகளை கற்பிட்டி பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கற்பிட்டி பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளர் ஒருவரின் வீட்டிலிருந்து, மேற்படி குர்ஆன் பிரதிகள், நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தளம் மாவட்ட தேர்தல் அலுவலகத்துக்குக் கிடைத்த ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கற்பிட்டி பொலிஸார் நடத்திய சோதனையின் போதே, இந்தக் குர்ஆன் பிரதிகள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேற்படி குர்ஆன் பிரதிகள், கற்பிட்டியிலுள்ள இஸ்லாமிய தொண்டு நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டவையாகும்.

எவ்வாறாயினும், சந்தேக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்