தேர்தல் தொடர்பான 09 முறைப்பாடுகள் பதிவு; தென்னங் கன்று வழங்கியதாகவும் குற்றச்சாட்டு: பொலிஸ் பேச்சாளர் தெரிவிப்பு

🕔 December 21, 2017

ள்ளுராட்சித் தேர்தல் வன்முறை மற்றும் சட்ட மீறல்கள் தொடர்பில் 09 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்று, பொலிஸ் பேச்சாளரும், அத்தியட்சகருமான ருவன் குணசேகர இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

மேற்படி முறைப்பாடுகள் கடந்த 09ஆம் திகதி தொடக்கம் இன்று வியாழக்கிழமை காலை 9.00 மணி வரையில் பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் தென்னங் கன்றுகளை விநியோகிக்கும் நடவடிக்கையொன்று நேற்று புதன்கிழமை பாணம பிரதேசத்தில் இடம்பெற்றதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து சுமார் 600 தென்னங் கன்றுகளை பொலிஸார் கைப்பற்றியதாகவும் , இவ் விடயம் தொடர்பாக பொத்துவில் நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

நபர்கள் மீதான தாக்குதல், அச்சுறுத்தல், வேட்புமனுவினை பறித்துக் கொண்டோடியமை, பதாகைகளை சேதப்படுத்தியமை மற்றும் பொருட்களை விநியோகித்தமை தொடர்பான முறைப்பாடுகளும் பதிவாகியுள்ளன என்றும், பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்