கொழும்பில் பிச்சையெடுக்க ஜனவரி முதல் தடை: அமைச்சர் சம்பிக்க

🕔 December 20, 2017

கொழும்பு நகரிலுள்ள வீதிகளிலும், பொது போக்குவரத்து வாகனங்களிலும் பிச்சையெடுப்தற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல், தடை விதிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

தாம் மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் படி, கொழும்பு நகர் பகுதியில் சுமார் 600 பிச்சைக்காரர்கள் உள்ளனர் எனவும் அவர் கூறினார்.

பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் கொழும்பு நகரின் அழகு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், பிச்சைக்காரர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் பொருட்டு, தமது அமைச்சினால் அவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதற்காக, ரிதிகம – அம்பலாந்தோட்ட பிரதேசத்தில் 80 மில்லியன் ரூபா செலவில் புனர்வாழ்வு நிலையமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்