வரவு – செலவுத் திட்டம் நிறைவேற்றம்

🕔 December 9, 2017

2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை நாடாளுமன்றில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேறியது.

வரவு – செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்புக்கான குழுநிலை விவாதம் நிறைவடைந்த நிலையில், இன்று மாலை வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது, ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 56 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணி மற்றும் ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷ, த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உள்ளிட்ட 14 பேர், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.

இதற்கிணங்க, 99 வாக்குகளால் வரவு – செலவுத் திட்டம் நிறைவேறியது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்