கைது செய்யப்பட்ட ஆவா குழுவினரின் ஆயுதங்கள் மீட்பு

🕔 November 30, 2017
– பாறுக் ஷிஹான் –

வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கொழும்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய இடங்களில் கைது செய்யப்பட்ட, ஆவா குழுவைச் சேர்ந்த 06 பேரிடமும் 06 வாள்கள் 02 கைக்கோடாரி என்பன மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஆவா குழுவின் முக்கிய சந்தேகநரான மொஹமட் இக்ரம் (22 வயது) உட்பட சிவகுமார் கதியோன் (20 வயது) மற்றும் ராசேந்திரம் சிந்துயன் (17 வயது) ஆகிய மூன்றுபேர் கொழும்பில் தலைமறைவாக இருந்த நிலையில்  நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் கோண்டாவில் கொக்குவில் மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் சந்தேகநபர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் மறைத்துவைக்கப்பட்டிருந்த 06 வாள்கள், 03 கைக்கோடாரிகளுடன், கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்