புதிய தமிழ் வானொலி; கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில், நாளை மறுதினம் ஆரம்பமாகிறது

🕔 November 29, 2017

– அஷ்ரப் ஏ சமத் –

லங்கையின் தமிழ் வானொலித்  துறையில்  புதிய அனுபவத்தை வழங்கும் பொருட்டு புதிய தமிழ் வானொலி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை கெப்பிட்டல் எப்.எம். எனும் பெயரில் ஆரம்பமாகவுள்ளதாகஇ அந்த வானொலியின் தலைமை அதிகாரி சியாஉல் ஹசன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனஇ இந்த வானொலியை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற  ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு இந்த தகவல்களை அவர் வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்;

“இந்த ஆரம்ப நிகழ்வினை மகிழ்விக்க  இந்திய சினிமா நடிகை சினேகா  மற்றும்  திரைப்பட பின்னணி பாடகர்களும் இலங்கை வர தரவுள்ளனா்.  அத்துடன் கெப்பிட்டல் எப்.எம். அனுசரணையில்  மூன்று மொழிகளையும் சேர்ந்த  சிரேஷ்ட ஒலிபரப்பாளா்கள் ஜனாதிபதியினால் கெளரவிக்கப்படவுள்ளனர்.

தமிழ் மொழியில் அறிவிப்பாளா்  பி.எச்.  அப்துல் ஹமீத்,  ஆங்கில மொழியில் அநுர டயஸ் பண்டார மற்றும் சிங்கள மொழியில்   சுனில் விஜயசிங்க ஆகியோா் கெளரவிக்கப்படவுள்ளனர்.

லிவா் புல் கம்பனியின் ரைஸ் மீடியா வலையமைப்பு நிறுவனத்தினால் கெப்பிட்டல் எப்.எம். ஆரம்பிக்கப்படுகின்றது.  முதற் கட்டமாக வடக்கு கிழக்கினை தளமாகக் கொண்டு  தமிழ் மொழியிலும், அடுத்த  வருடங்களில் ஏனைய மொழிகளிலும்  அலைவரிசைகள் ஆரம்பிக்கப்படும்.

எமது நிறுவனம் ஏனைய வானொலிகளோடு போட்டி போட்டுக் கொண்டு,  ‘கேட்டால் பணம்’, ‘குருந்செய்தி அனுப்பினால்  பணம்’ என்று களமிறங்காது. சகல இன, மத மற்றும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த பாடுபடும்.  சிறந்த செய்திகளை வழங்குவதல்,  உள்நாட்டு கலைஞா்களுககு களம் அமைத்துக் கொடுத்தல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டது எமது அலைவரிசை.  கிருலப்பனை தேவிகா கார்டனில் இருந்து முழு இலங்கைக்கும்  தமது ஒலிபரப்பினை வழங்குகின்றது.

குறுகிய  காலத்தினுள் நேயா்களின் இதயத்திற்கு  நெருங்கிய  தோழனாய் கெப்பிட்டல் எப்.எம். மாறவிருக்கின்றது. மேலும், களிப்பூட்டும் ஒரு வானொலியாக மட்டுமன்றி,  சமூகப் பொறுப்புள்ள வானொலியாகவும், சமுகத்தின் குறை நிறைகளை சீர்துாக்கி சமன் செய்யும் பணியையும் ஆற்றும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்