அமெரிக்காவை அடையக் கூடிய ஏவுகணையை, வடகொரியா ஏவியது: பதட்டத்தில் உலகம்

🕔 November 29, 2017

மெரிக்கா கண்டத்தை முழுமையாக அடையக் கூடிய புதிய வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக வட கொரியா தெரிவித்துள்ளது.

அணு ஆயுத நாடாக மாற வேண்டும் என்ற தனது குறிக்கோளை வட கொரியா அடைந்துள்ளதாக அந்நாட்டு அரச தொலைக்காட்சி கூறியுள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்தது என கூறப்பட்ட ஹவாசாங்-15 ஏவுகணை புதன்கிழமை அதிகாலை ஏவப்பட்டது.

ஜப்பான் கடலில் விழுந்த இந்த ஏவுகணை, வட கொரியா முன்பு சோதித்த ஏவுகணைகளை விட அதிக உயரம் பறந்தது.

4,475 கிலோ மீட்டர் உயரத்தில், 960 கிலோ மீட்டருக்கு 53 நிமிடங்கள் இந்த ஏவுகணை பறந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னர் வடகொரியா ஏவிய ஏவுகணைகளை விட மிகவும் உயரமாக, கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை வடகொரியா ஏவியுள்ளதோடு, உலகளாவிய அச்சுறுத்தலை விடுத்துள்ளதாகவும் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் கூறியுள்ளார்.

இன்று வட கொரியா ஏவுகணையினை ஏவியமை காரணமாக, உலகளவில் பதட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜப்பானும், தென் கொரியாவும் வடகொரியாவின் ஏவுகணை சோதனையை கண்டித்துள்ளன. இதற்கு பதிலடி தரும்விதமாக, தென் கொரியா தனது ஏவுகணையை ஏவியுள்ளது.

இது தொடர்பில் அமெரிக்கா கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்