ஐ.தே.கட்சியை சீர்குலைப்பதற்காக, பிணைமுறி விசாரணை ஆணைக்குழுவை ஜனாதிபதி உருவாக்கவில்லை

🕔 November 26, 2017

பிணைமுறி மோசடி தொடர்பில்  விசாரிக்கும் ஆணைக்குழுவினை ஜனாதிபதி உருவாக்கியது, ஐக்கிய தேசியக் கட்சியை சீர்குலைப்பதற்காக அல்ல என்று, கிராமிய பொருளாதார அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்தார்.

கலாவெவ பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே, இந்த விடயத்தைக் கூறினார்.

பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டவர்களின் பெயர்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று இதன்போது கூறிய அமைச்சர்; அவ்வாறான குற்றங்களை தான் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்