பொம்மைவெளியில் ஆயுதங்கள் மீட்பு

🕔 November 26, 2017
– பாறுக் ஷிஹான்-

யாழ்ப்பாணம் பொம்மைவெளிப் பகுதியில் ஒரு தொகை துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிகுண்டுகள் ஆகியவை  யாழ்ப்பாணம் பொலிஸாரால் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை மீட்கப்பட்டன.

பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அவை மீட்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.

உரப் பைகளில் வைத்துக் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட இந்த ஆயுதங்கள் துருப்பிடித்த நிலையில் காணப்பட்டன.
இதன்போது 10 துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த ஆயுதங்கள் எப்போது யாரால் – குறித்த இடத்தில் போடப்பட்டன என்பது குறித்துத் தெரியவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்