நாடு முழுவதும் அதிக மழை பெய்யும்; வெள்ளம் ஏற்படும் சாத்தியமும் உள்ளது: வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

🕔 November 23, 2017

நாடு முழுவதிலும் குறிப்பாக கிழக்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சனிக்கிழமை தொடக்கம் அதிகளவு மழை பெய்யலாம் என, வளி மண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில் தாழுக்கம் ஏற்பட்டுள்ளமையினாலேயே, இவ்வாறு அதிக மழை பெய்யலாம் என எதிர்வு கூறப்படுகிறது.

இந்த மழையினால் வெள்ளம் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்ட மாவட்டத்திலும் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்