கிழக்கில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரம் வெளியானது

🕔 November 23, 2017

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ள பட்டதாரிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதற்கிணங்க, மேற்படி விபரங்கள் இன்று வியாழக்கிழமை, கிழக்கு மாகாண சபையின் இணையத்தளமான www.ep.gov.lk இல் வெளியாகியுள்ளன.

இதேவேளை, தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான நியமனங்கள், திருகோணமலை ஏகம்பரம் மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமையில் நாளை மறுதினம் சனிக்கிழமை வழங்கப்படும் என்று, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் ஐ.கே.ஜி. முத்துபண்டா தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்