சாய்ந்தமருதில் ‘போதையற்ற இளைஞர்கள்’ உறுதிமொழி பிரகடனம்
– எம்.வை. அமீர், யூ.கே. காலித்தீன்-
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இளைஞர் கழக சம்மேளனத்தின் செயலமர்வும் போதையற்ற (No Drugs) இளைஞர்கள் நாம் என்ற உறுதிமொழி பிரகடனம் செய்யும் நிகழ்வும் சாய்ந்தமருது யூத் சென்டரில் இன்று ஞாயிற்றுக்கிமை இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இளைஞர் மது ஒழிப்பு சமூக நற்பணி வேலைத்திட்டத்தின் கீழ்நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸீம் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா கலந்து கொண்டு போதைப்பொருள் பாவனையின் காரணமாக நாடு எதிர்நோக்கும் பாரிய சவால்கள் தொடர்பாகவும் சமுதாய சீர்கேடுகள் பற்றியும் அதிலிருந்து விடுபடவேண்டியதன் அவசியம் குறித்தும் உரையாற்றினார்.
இதில் கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ. வாஹீட், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களான இசட்.எம். சாஜித், பைசர் டில்சாத், மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி அலியார் முபாறக் மற்றும் உணவு மற்றும் ஔடதங்கள் பிராந்திய பரிசோதகர் எஸ். தஸ்தகீர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வின் இறுதியில் ‘போதையற்ற (No Drugs) இளைஞர்கள் நாம்’ என்ற உறுதிமொழி பிரகடனம் மேற்கொள்ளப்பட்டது.