உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட, மஹிந்த அணி தீர்மானம்

🕔 November 15, 2017

ள்ளுராட்சித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் தனித்து போட்டியிட தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஒன்றிணைந்த எதிரணியினரின் கூட்டம் நேற்று செவ்வாய்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிணங்க பொதுஜன பெரமுன கட்சியில், இவர்கள் களமிறங்கவுள்ளனர்.

அரசாங்க தரப்பிலுள்ளவர்களும் தங்களுடன் இணைய விரும்பினால் அவர்களை சேர்த்துக் கொள்வதற்கு தாம் தயாராக உள்ளதாகவும், இதன்போது அவர்கள் கூறினர்.

மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் உள்ளுராட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்கு, ஒன்றினைந்த எதிரணியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆயினும், அவ்வாறு இணைந்து போட்டியிடுவதாயின் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென, எதிரணியினர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதற்கு மைத்திரி தலைமையிலான அணியினர் சாதகமான நிலையினை வெளிக்காட்டாமையினால், மஹிந்த தரப்பினர் தனித்து போட்டியிடுவதென தீர்மானத்துள்ளனர்.

Comments