மஹிந்தவின் முன்னாள் பிரதம அதிகாரிக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

🕔 November 15, 2017

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் 21ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை இன்று புதன்கிழமை கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது, கொழும்பில் ஹைட் ரிஜென்சி ஹோட்டல் நிர்மாணத்துக்காக ஒதுக்கப்பட்ட அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், காமினி செனரத் உள்ளிட்ட மூவரையும் விளக்க மறியலில் வைக்குமாறு ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவு வழங்கியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்