வெலிமடை பகுதியில் ‘போரா 12’ மீட்பு

🕔 November 9, 2017

– க. கிஷாந்தன் –

போரா 12′ என அழைக்கப்படும் உள்நாட்டு துப்பாக்கியொன்றை, வெலிமடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவிதொட்டவெல பகுதியில் பொலிஸார் மீட்டுள்ளனர்.

பண்டாரவளை – வெலிமடை பிரதான வீதியில் பாதுகாப்பு ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பொலிஸார், இன்று வியாழக்கிழமை அதிகாலை 01 மணியளவில் சந்தேகத்திற்கிடமாக வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்றினை சோதனைக்கு உட்படுத்தினர். இதன்போது முச்சக்கர வண்டியிலிருந்து அனுமதிப்பத்திரமற்ற ‘போரா 12’ ரக உள்நாட்டு துப்பாக்கியொன்றினை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியில் பயணித்த 03 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது குறித்து மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்