சஊதி தலைநகர் மீது ஏவுகணைத் தாக்குதல்; நேற்றிரவு பதட்டம்

🕔 November 5, 2017

ஊதி அரேபிய தலைநகர் றியாதிலுள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையம் மீது, நேற்று சனிக்கழமை இரவு, திடீரென ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

யெமனிலிருந்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாகத்  தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதல் காரணமாக அங்கு பெரும் பதற்றநிலை காணப்பட்டது. ஆயினும் சேதங்களும் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

சஊதி அரசாங்கம் அண்மைக்காலமாக யெனனிலுள்ள போராட்டக் குழுக்களுக்கு எதிராக  கடுமையான ஆகாய வழி தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. இந்த நிலையில் சவூதியின் தலைநகர் றியாத்தில் நேற்றிரவு ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்