அரியாலையில் இளைஞரைச் சுட்டுக் கொன்ற குற்றச்சாட்டில், அதிரடிப்படையினர் இருவர் கைது

🕔 November 3, 2017

ரியாலையில் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள் எனும் சந்தேகத்தின் பேரில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த உப பரிசோதகர் ஒருவரும், கொன்ஸ்டபிள் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாழ்ப்பாணம் அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாவர்.

மேற்படி அதிரடிப்படையினரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

உப பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிசாந்த மற்றும் கொன்ஸ்டபிள் ரத்னாயக்க முதயன்சலாககே இந்திக புஸ்ப குமார ஆகியோரே இவ்வாறு கைதாகியுள்ளனர்.

அடையாள அணி வகுப்புக்காக இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்படவுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

ஒக்டோபர் 09ஆம் திகதி அரியாலையில் இளைஞர் ஒருவரை, மேற்படி சந்தேக நபர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் வந்து சுட்டு விட்டு, தப்பிச் சென்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் மேற்படி இளைஞர் பலியானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்